இன்று உலக பெண் நீதிபதிகள் தினம்
உலக பெண் நீதிபதிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும மார்ச் 10ல் கடைபிடிக்கப்படுகிறது.
நீதியை நிலைநாட்டுவதில் நீதிபதிகளின் பங்கு முக்கியமானது.
பெண் நீதிபதிகளின் பணிகளை அங்கீகரிக்கவும், அனைத்து நாடுகளும் நீதித்துறையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வலியுறுத்தியும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கத்தார் அரசால் முன்மொழியப்பட்டு, ஐநா பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த தினம், 2021-ல் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
நீதியில் பெண்கள், நீதிக்காக பெண்கள் என்பது இந்தாண்டு மையக்கருத்து.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஆண்களை விட பெண் நீதிபதிகள் அதிகம்.
அங்குள்ள உச்ச நீதிமன்றங்களில் 41 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர். இதை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும்.