மெனோபாஸ் சமயத்தில் வரும் மார்பக தொய்வு… உடற்பயிற்சி கைக்கொடுக்கும்!

மெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் பெண்கள் உடல் ரீதியாக பல மாற்றங்களை சந்திக்கின்றனர். அதில் மார்பக தொய்வும் ஓன்று.

குறிப்பாக 40 வயதிற்கு மேல் சினைப்பையானது தான் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் அளவை படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வரும். இது தான் மெனோபாஸ் முந்தய காலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சமயதில் சில பெண்களுக்கு மார்பகங்களில் உள்ள சுரப்பி திசு சுருங்க ஆரம்பித்து விடும்.

மார்பகங்கள் அமைப்பு குறைந்த அடர்த்தியாகவும், அதிக கொழுப்பாகவும் மாறுகிறது. அதுவே பலருக்கு மார்பகங்கள் பெரிதாகி, பின் தொய்வுக்கு வழி வகுக்கும்.

இந்த தொய்வை மேம்படுத்த உடற்பயிற்சி செய்யலாம். இது மார்பகங்களின் அடியில் உள்ள தசைகளை வளர்த்து, டோனிங் செய்ய உதவும்.

புஷ் அப்கள், எடை தூக்குதல் போன்ற மார்பு தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது, நல்ல மாற்றத்தை தரும்.

மெனோபாஸ் சமயத்தில் 5 ல் 1 பெண்களுக்கு மார்பக அளவு அதிகரிக்கின்றன. சரியான ப்ராவை அணிவதும் இந்த பிரச்னைக்கு நல்ல பயன் தரும். .