ஆயுள் முழுதும் தொடரும் நுண்ணுாட்டச்சத்து குறைபாடுகள்!

ஹீமோகுளோபின் எனப்படும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், மூளையின் நரம்பு வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.

இதன் குறைபாடு, சரி செய்ய முடியாத அறிவாற்றல் மற்றும் இயக்க குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.

எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சி, காயம் விரைவில் ஆறுவதற்கான நொதி வினையூக்கியாக செயல்பட துத்தநாகச் சத்து அவசியம்.

ஐந்து வயதுவரை குழந்தையின் மூளை வளர்ச்சி இருக்கும். இதற்கு அவசியமான தைராய்டு ஹார்மோன் சுரப்பிற்கு அயோடின் தேவை. இதன் பற்றாக்குறை நிரந்தர மூளை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

எலும்புகளின் உறுதித்தன்மையை உறுதி செய்வதற்கும், குழந்தைப் பருவ ரிக்கெட்ஸ் நோயை தடுப்பதற்கும் இச்சத்து அவசியம்.

ஊட்டச்சத்து குறைபாடைத் தவிர்க்க, குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். அதன்பின் இணை உணவுகளுடன் 2 வயது வரை தாய்ப்பால் தர வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் தீவிர வைட்டமின் பி12 குறைபாட்டால், 50 வயதிற்கு பின், நரம்பு பாதிப்பு, பக்கவாதம், நடையில் தடுமாற்றம், அறிவாற்றல் இழப்பு ஏற்படலாம்.

மெக்னீ சியம், பொட்டாசியம் குறைபாடு, சீரற்ற இதயத் துடிப்பு, நடுக்கம், அதீத தசை பலவீனத்தை துாண்டுகிறது.

கடுமையான வைட்டமின் சி குறைபாடு கொலாஜன் சிதைவடைகிறது இது சீழ் பிடித்த புண்கள், பற்கள் தளர்வதற்கும் வழிவகுக்கிறது.