இன்று இந்திய தேசிய ஒற்றுமை தினம் 
        
சுதந்திரத்துக்குப்பின் பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை, ஒரே இந்தியாவாக மாற்றிய பெருமைக்குரியவர் வல்லபாய் படேல்.  
        
'இரும்பு மனிதர்' என போற்றப்படும் இவரது பிறந்த தினம், அக்., 31ல் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. 
        
குஜராத்தின் கேடா மாவட்டத்தில் நாடியாத் கிராமத்தில் 1875, அக், 31ல் விவசாய குடும்பத்தில் படேல் பிறந்தார்.  
        
காந்திஜியின் உப்பு சத்யாகிரக போராட்டத்தில், இவரது பங்கு முக்கியமானது. இதனால் சிறை சென்றார்.  
        
 1942, ஆக.,9ல், வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட இவர், 1945 ஜூன் 15ல் விடுதலையானார். 
        
இந்தியா சுதந்திரம் பெற்ற போது, நாடு 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது. இவை சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர்.  
        
இவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பு நாட்டின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராகவும் இருந்த படேலிடம் ஒப்படைக்கப்பட்டது. 
        
இவரது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில்,குஜராத்தின் சர்தார் சரோவர் அணை அருகே, உலகின் மிக உயரமான சிலை 2018 அக்., 31ல் திறக்கப்பட்டது.