மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு இதோ சில டிரிக்ஸ்
வெளிப்படையாக பேசுங்கள்... சந்தோஷம், சோகம், கோபம் என அனைத்து உணர்வுகளின் போதும் மனம் விட்டு தெளிவாக பேசும்போது பிணைப்பு பலப்படும்.
துணையை பாராட்டுங்கள்... அன்பான வார்த்தைகள், நன்றி, பாராட்டுதல் போன்றவை உங்களின் துணைக்கு இதயபூர்வமான பிணைப்பை உண்டாக்கும்.
பொறுமையாக இருங்கள்... துணை கூறுவதை தவிர்க்காமல் பொறுமையாக, கவனமாக கேட்டு அவர்களின் உணர்ச்சிகளை புரிந்து, அதற்கேற்ப செயல்பட்டால் புரிதல் வலுப்படும்.
உரிய நேரம் ஒதுக்கவும்... இன்றைய பரபரப்பான உலகில் குறிப்பிட்ட நேரத்தை துணைக்கு கட்டாயமாக ஒதுக்க வேண்டும்.
பணிச்சுவையை பகிரவும்... ஒருவரின் பணியை மற்றொருவர் ஏற்றுக்கொண்டு முடிந்தளவு பகிர்ந்து, உதவுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்தலாம்.
அன்பு... மென்மையான தொடுதல், அன்பான அரவணைப்பு அல்லது உணர்ச்சிமிக்க முத்தம் போன்ற நெருக்கமான உடல் அசைவுகள் அன்பு மற்றும் நெருக்கத்தை வலுப்படுத்தக்கூடும்.
பரிசு வழங்குதல்... உங்களின் துணைக்கு பிடித்தாற்போன்று எளிய, அழகிய மற்றும் அர்த்தமுள்ள பரிசுகளால் அவ்வப்போது ஆச்சரியப்படுத்துங்கள்.
ஆதரவுக்கரம் நீட்டவும்... உங்கள் துணையின் நியாயமான செயல்களுக்கு அவ்வப்போது ஆதரவுக்கரம் நீட்டுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்தலாம்.