மயோனைஸ்க்கு ஓராண்டு தடை... என்னாச்சு?

தெரு உணவு வகைகள், ஷவர்மா, வறுக்கப்பட்ட மற்றும் தந்தூரி போன்ற அசைவ உணவுகளில் ஒரு முக்கிய அங்கமாக மயோனைஸ் மாறியுள்ளது.

பச்சை முட்டைகளை பயன்படுத்தி இது தயாரிக்கப்படும் நிலையில், கிருமி தொற்று அதிகரிக்கவும், பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக மயோனைஸ் விஷமாக மாறக்கூடும்.

எனவே, உடனடியாக இதன் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி ஓராண்டு தடை விதித்துள்ளது தமிழக அரசு.

மயோனைஸ் சார்ந்த பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் எச்சரிக்கையுடன் செயல்படவும், பொருட்களை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துமீறி விற்பனையில் ஈடுபட்டால் அபராதம், உரிமம் ரத்து செய்தல் உட்பட கடுமையான தண்டனைகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மயோனைஸில் அதிக கலோரியும், கொழுப்பும் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்கும்.

ரத்த சர்க்கரையை அதிகரிப்பதால் நீரிழிவுக்கு வழிவகுக்கும்.

இதிலுள்ள அதிகளவு ஒமேகா 6 கொழுப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்; மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.