மாணவர்களின் மனநலத்தை பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்
ஆன்லைன் விளையாட்டுகள் மாணவர்களை திசைதிருப்பி குற்றவாளிகளாக மாற்ற முயற்சிக்கின்றன.
துவக்கத்தில் பிற விளையாட்டுகள் போலத்தான் இவை உள்ளன. மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து விளையாட துவங்குகின்றனர். பின் படிப்படியாக 'டாஸ்க்' தரப்படுகிறது.
முதலில் எளிய 'டாஸ்க்'குள் தரப்படும். பின், ஆசைகாட்டி படிப்படியாக அதிகரிக்கப்படும்; அதற்கேற்ப டைமண்ட் பாயின்ட்கள் கிடைக்கும். தொடர்ந்து, வன்முறை பாதைக்கு மாறுகிறது.
நண்பரை டீஸ் செய்ய துவங்கும் டாஸ்க், கொலை செய்யவும் தூண்டும். இதற்கு கருவிகளாக துப்பாக்கி, வில் அம்பு போன்றவற்றை அந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனமே விற்கிறது.
துவக்கத்தில் சிறிய தொகை தானே என பிள்ளைகளுக்கு பணம் கொடுக்கும் பெற்றோர், அதிகரிக்கும் போது மறுக்கின்றனர்.
விளையாட்டுக்கு அடிமையாகிவிட்ட மாணவர்களோ வீட்டிலிருந்தும், ஏ.டி.எம். கார்டு மூலமும் பணத்தை திருடி டைமண்ட் பாயின்ட்களை வாங்குகின்றனர்.
பல நாட்களுக்கு பின் பெற்றோருக்கு தெரியும் போது நிலைமை எல்லை மீறி விடுகிறது. படிப்பு உட்பட அனைத்தும் பாதிக்கப்படுவதுடன், மாணவர் மனநோய் பாதித்தவர் போல் இருப்பார்.
எனவே, தங்கள் குழந்தைகளிடம் அலைபேசியை தரும் பெற்றோர், அவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே வீண் பிரச்னைகளிலிருந்து தப்ப முடியும்.