வாந்தி வர காரணங்கள் ஏராளம்… அறிவோமா…

வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான்.

பொதுவாகவே கெட்டுப்போன உணவை சாப்பிடுவது, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவ வாந்தியை ஏற்படுத்தும்.

மேலும் உணவுக் குழாய் அல்லது இரைப்பை புற்றுநோய், வயிற்றுப்போக்கு, காலரா, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை போன்ற நோய் சம்பந்தமான காரணங்களாலும் வாந்தி வரலாம்.

காதும் ஒரு காரணமாகும். காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்னைகளாலும் வாந்தி வரும்.

காதில் வெஸ்டிபுலர் அப்பாரட்டஸ் என்று ஓர் அமைப்பு உள்ளது. இதுதான் நம்மை நடக்கவைக்கிறது; உட்காரவைக்கிறது; உடலைச் சமநிலைப்படுத்துகிறது.

இந்த அமைப்பு தூண்டப்படும்போது வாந்தி வரும். இதனால்தான் பேருந்தில் பயணிக்கும்போது, கடல் பயணம், விமானப் பயணங்களின்போது வாந்தி வருகிறது.

அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது 5 முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இப்படி அதிகம் ஆகும் போது உடனே மருத்துவரை அணுகுவது அவசியமாகும்