இயற்கை வைரம் மட்டுமே இனி வைரம்: பி.ஐ.எஸ்., தர நிர்ணய அமைப்பு உத்தரவு

இந்தியாவில் இயற்கை வைரம் மட்டுமே இனி வைரம் என அழைக்கப்பட வேண்டும் என்று, இந்திய தர நிர்ணய அமைப்பான பி.ஐ எஸ்., அறிவித்துள்ளது.

தங்கத்திற்கு தொள்ளாயிரத்து பதினாறு என்ற ஹால்மார்க் எண் முத்திரை உள்ளது.

இதுப்போல வைரத்திற்கு 'ஐ .எஸ்., பத்தொன்பதாயிரத்து நானூற்று அறுபத்து ஒன்பது:இரண்டாயிரத்து இருபத்து ஐந்து' என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் இந்த தரநிலை கட்டமைக்கப்பட்டுள்ளது .

குறிப்பாக, டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் காணப்படும் முரண்பாடுகளை தவிர்க்கவும், தெளிவற்ற விளக்கங்களை கையாளவும் இந்த தரநிலை கொண்டு வரப்பட்டுள்ளது.

இயற்கை, அசல், உண்மையான, விலைமதிப்பற்ற போன்ற பெயர்களையும் இயற்கை வைரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதி தரப்பட்டு உள்ளது.

பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், தோண்டி எடுக்கப்பட்ட வைரம் போன்ற வரிகளை இனி பயன்படுத்தக் கூடாது.

செயற்கை வைரங்களை பற்றி குறிப்பிடும் போது, அவற்றை, 'பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரம்' என, தெளிவாக அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.