திருச்சியில் பார்க்க வேண்டிய கோவில்கள் !

பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள். இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமயபுரம், மாரியம்மன் கோயில்... 'சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்' என்ற முதுமொழிக்கு ஏற்ப பக்தர்களின் வேண்டுதல்களை, எங்கிருந்து வேண்டிக்கொண்டாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள் இந்த அம்மன்.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்... மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகர் கோயில் இது. மலைக்கோட்டையின் மீதிருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாகத் தெரியும்.

பஞ்சபூத தலங்களில் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோயில் நீர் தலமாகும். மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. 9 துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் உள்ளது. பக்தர்கள் துளை வழியே சுவாமியை தரிசிக்க வேண்டும்.

உத்தமர் கோயில், திருச்சி... பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம் இது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசம்.

அழகிய மணவாளர் கோயில், உறையூர்... வைகுண்ட ஏகாதசியின்போது சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இங்கு தை அல்லது மாசியில் வரும் ஏகாதசியன்று தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள்.

இந்த செடியின் மீது சூரிய ஒளி பட்டவுடன் ஒளி ஆற்றின் தண்ணீரில் பிரதிபலிப்பதால் தண்ணீர் நிறம் மாறி காணப்படுகிறது.