திருப்பதி லட்டு வரலாறு!!

திருப்பதி என்றதும், அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஒன்று, ஏழுமலையான்; மற்றொன்று, அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தான். திருப்பதி லட்டின் வரலாறு பற்றிய சுவாரஸ்யங்களை பார்ப்போம்.

திருப்பதியில், கி.பி., 1445ம் ஆண்டு வரை, திருப்பொங்கம் என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பிறகு, எளிதில் கெட்டு போகாமல் இருக்கும், சுய்யம் என்ற இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.