கோடையில் சில்லென்று இருக்க இந்தியாவில் விசிட் செய்ய வேண்டிய சில இடங்கள் !
இமயமலையில் மறைந்துள்ள லே லடாக், பனி மூடிய சிகரங்கள் சூழ கோடையிலும் குளிர்காலம் போன்று உணர வைக்கும்.
ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள சிம்லா, கோடை விடுமுறையை கொண்டாட
உகந்த ஒன்றாகும். பைன் மரங்களின் பின்னணியில், மூடுபனி நிறைந்த காலநிலை,
உற்சாகத்தை அளிக்கும்.
ஹிமாச்சல பிரதேசத்தின் பிரபலமான மலைவாசஸ்தலமான மணாலி, உயரமான மலைகள், அழகிய ஆறுகள், குளிர்ந்த வானிலை என சில்லென்று உணரவைக்கும்.
பனி மூடிய நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற குல்மார்க், சுற்றுலாப்பயணிகளை மெய் சிலிர்க்க வைக்கும்.
இமயமலையின் கிழக்குப் பகுதியில் 10,000 அடிக்கும்
அதிகமான உயரத்திலுள்ள தவாங், குளிச்சியான வெப்பநிலை, பனி மூடிய
சிகரங்களுடன் புத்துணர்ச்சியை தருகிறது.
கார்கில்
மாவட்டத்திலுள்ள டிராஸ் உலகில் மக்கள் வசிக்கும் இரண்டாவது மிகவும் குளிரான
இடமாகும். எலும்புகளை உறைய வைக்கும் பனிச்சிகரங்களில் டிரெக்கிங்
சாகசங்களை செய்யலாம்.
ஹிமாச்சல பிரதேசத்தின் ஸ்பிட்டி
பள்ளத்தாக்கு, பனி மூடிய சிகரங்கள், நீர்வீழ்ச்சிகள் என சுற்றுலாப்
பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவங்களை தரும்.