குட்டீஸ்களுக்கு பிடித்தமான உருளைக்கிழங்கு ஆம்லெட்
தேவையானப் பொருட்கள்: முட்டை - 2, உருளைக்கிழங்கு, குடமிளகாய் - தலா 1, மிளகு துாள் - 1 சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
முதலில் உருளைக்கிழங்கு மற்றும் குடமிளகாயை, நன்றாக கழுவி சிறிதாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகு பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், உருளைக்கிழங்கு, குடமிளகாய் துண்டுகளை போட்டு மென்மையாகும் வரை நன்கு வதக்கவும்.
அதன் பின், இதன் மீது முட்டை கலவையை, பரவலாக சமமாக ஊற்றி மிதமான தணலில் வைக்கவும்.
ஒரு பக்கம் வெந்த பின், மற்றொரு பக்கம் திருப்பி போட்டு, பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்தால் உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி.
தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட சுவை அள்ளும். குழந்தைகள் ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர்.