குழந்தைகளுக்கு ரத்தசோகை உண்டாவதை தவிர்க்க !
ரத்த சிகப்பணுக்களிலுள்ள இரும்புச்சத்து (ஹீமோகுளோபின்) அளவு குறைவதால் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால், குழந்தையின் உடல், மன நலனில் பாதிப்பு ஏற்படும்.
பசியின்மை, அதீத சோர்வு, பிற குழந்தைகளுடன் விளையாடாமல் நோய்வாய்ப்படுதல், எடை குறைவு, ஊட்டச்சத்து பற்றாக்குறை, மறதி, படிப்பில் கவனமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
குழந்தை பிறந்த 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
பிறகு திட உணவுகள் ஆரம்பிக்கும்போது தாய்ப்பாலுடன் பசும்பால், பாக்கெட் பால் அதிகளவு கொடுக்கும் போது இரும்புச்சத்து தேவையை பூர்த்தி செய்யாமல் விடுகின்றனர் பெண்கள்.
எனவே, தாய்ப்பாலுடன் வீட்டிலுள்ள உணவுகளையும் கொடுக்க வேண்டும். 5 வயது வரை அரை லிட்டருக்கு மிகாமல் பசும்பால் கொடுக்கலாம்.
கீரை, பயறு, உளுந்து, சோயா, வெல்லம், கடலை, முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றில் இரும்புச்சத்து உள்ளதால் டாக்டர் பரிந்துரைபடி இந்த உணவுகளை கொடுக்கலாம்.
டாக்டர் ஆலோசனைப்படி ஆண்டிற்கு இருமுறை பூச்சிமருந்து, இரும்புச்சத்து மருந்து கொடுக்கலாம்; இதை உணவின் இடையில் கொடுத்தால் விரைவாக வேலை செய்யும்.
இந்த டானிக் பற்களில் பட்டால் கறை ஏற்படலாம் என்பதால் வாய் கொப்பளிக்க பழக்க வேண்டும்.
இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தாலும் இரும்புச்சத்து மருந்தினை கொடுக்கலாம்.