மது குடிப்பதால் வரும் பாதிப்புகள் என்னென்ன?

மது குடித்தவுடன், இரைப்பையில் இருந்து நேராக கல்லீரலுக்குச் சென்று, ரத்தத்தில் கலந்து, மூளைக்குச் செல்லும்.

ஒவ்வொரு முறை குடிக்கும் மதுவும், முதலில் கல்லீரலைத் தான் பாதிக்கும். தொடர்ந்து மது குடிப்பதால், கல்லீரல் திசுக்கள் செயலிழந்து, 'சிரோசிஸ்' என்ற நிலை வரும்.

கல்லீரல் செயலிழக்க துவங்கும் போது, மன ரீதியில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மது, உடல் நலத்தை பாதிக்கிறது. இதற்கு அடுத்து, கேன்சர் கூட ஏற்படலாம்.

இப்பழக்கம் தவறு என்று தெரியாமல், யாரும் இல்லை. ஆனால், குடிக்காமல் இருக்க முடிவதில்லை.

இப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், மதுவை நிறுத்தினால், மனதில் ஒரு பயம், பதட்டம், படபடப்பு, ஓய்வில்லாத உணர்வு ஏற்படும்.

மது குடித்ததும், மனது அமைதியாக இருக்கும். மது என்ற அரக்கனின் கோரப்பிடியில் சிக்கியவர்களால், அதிலிருந்து மீள்வது மிகவும் சிரமமான விஷயம்.

மதுவுக்கு அடிமையானவர்கள், இதுவரையிலும் பழகியிருந்த சூழ்நிலையை, முதலில் மாற்ற வேண்டும். முறையான மருத்துவ சிகிச்சை எடுத்தால், மதுவின் மீதே வெறுப்புணர்வை உண்டு பண்ண முடியும்.

இது தவறு என்று தானாகவே உணருபவர்கள் மட்டுமே, இப்பழக்கத்தில் இருந்து வெளியில் வர முடியும். ஆல்கஹால்' பாதிப்பை உடலில் இருந்து முற்றிலும் நீக்க, மருந்துகள் உள்ளன. அதை எடுத்து கொண்டு மீள வேண்டும்.