மன அழுத்தத்திற்கான பொதுவான அறிகுறிகள் சில...
வெளியில் செல்லாமல், வீட்டிலேயே அடைந்து கிடப்பது. பள்ளி, கல்லுாரி அல்லது அலுவலகம் செல்ல தயங்குவது; தினசரி வேலைகளைச் செய்யாமல் தள்ளிப் போடுவது.
எதிலும் ஆர்வம் இல்லாமல், நண்பர்கள், குடும்பத்தினருடன் விலகியே இருப்பது.
குறிப்பாக கவனமின்மை, வழக்கமாகச் செய்யும் பொழுது போக்குகளை தவிர்ப்பது.
குற்ற உணர்வு, எரிச்சல், சோகம், விரக்தி, தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது.
நான் எதற்கும் லாயக்கில்லை; எதுவும் நல்லதே நடக்காது; எல்லா தவறு களுக்கும் நானே காரணம்; வாழ்வதில் அர்த்தம் இல்லை... போன்ற எதிர் மறை எண்ணங்கள்.
உடல் ரீதியில் சோர்வு, தலைவலி, தசைகளில் வலி, இறுக்கம், துாக்கமின்மை, செரிமானப் பிரச்னைகள், காரணம் இல்லாமல் உடல் எடை குறைவது போன்ற பாதிப்புகள் தென்படலாம். .
இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு அதிகமான பிரச்னைகளோ மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.