தண்ணீரை மீண்டும் கொதிக்க வைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் அறிவோமா..?

கொதிக்க வைத்த தண்ணீரை மீண்டும் கொதிக்க வைப்பதில் பல ஆபத்துகள் உள்ளன என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எல்லா திரவங்களையும் கொதிக்க வைக்கும்போது அதிக செறிவு பெறுகிறது. அதேபோல் தண்ணீரை மீண்டும் கொதிக்க வைப்பதால் அதிகம் செறிவூட்டப்படுகிறது மற்றும் இதில் கரைந்த உப்புகளின் அளவு அதிகரிக்கிறது.

நைட்ரேட்ஸ், ஆர்சானிக், ஃப்ளோரைடு, கால்சியம், ஈயம் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் உப்புகள் மீண்டும் கொதிக்க வைக்கும் தண்ணீரில் உருவாகிறது.

இதனால் புற்றுநோய், எலும்பு கோளாறுகள், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் கற்கள், இதய பிரச்சினைகள், உளவியல் கோளாறு உள்ளிட்ட நோய்களை ஏற்படுகிறது.

உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதைத் தவிர, மீண்டும் கொதிக்க வைத்த தண்ணீரைப் பயன்படுத்துவதால் உணவு மற்றும் பானங்களின் சுவையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

எனவே குளிர்ந்த தண்ணீரில் காபி அல்லது தேநீர் தயாரித்தால் சிறந்த சுவையை தரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேவையான அளவு தண்ணீரை உங்கள் பாத்திரத்தில் நிரப்பி ஒருமுறை மட்டும் கொதிக்க வைத்து குடித்தால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்க உதவும்.