பெண்கள் புரிந்து கொள்ளாத மன அழுத்த ஹார்மோன் ரகசியம்
ஒழுங்கற்ற, தாமதமாக மாதவிடாய் ஏற்படுவதற்கு, நாம் தான் பல காரணங்களை நினைக்கிறோம்.
உண்மையில், மன அழுத்தம் இதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை, பல நேரங்களில் பெண்கள் உணர்வதில்லை.
மன அழுத்தம் ஏற்படும் போது, 'கார்டிசோல்' எனப்படும் 'ஸ்ட்ரெஸ் ஹார்மோன்' உற்பத்தி அதிகரிக்கிறது.
தொடர்ந்து கார்டிசோல் அளவு அதிகமாக இருக்கும் போது, உடலின் உள் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை பாதிப்படைகிறது.
இதன் காரணமாக, கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டு மாதவிடாய் தாமதமாகவும், ஒழுங்கற்றதாகவும் மாறலாம், தற்காலிகமாக நின்றும் விடலாம்.
தாமதமான மாதவிடாய், வழக்கத்திற்கு மாறாக, அதிக அல்லது குறைந்த ரத்தப்போக்கு ஆகிய மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.
மேலும், தீவிரமான மாதவிடாய்க்கு முன், அறிகுறிகளான சோர்வு, பதற்றம், தலைவலி, செரிமானமின்மை போன்றவையும் அறிகுறிகளாகும்.
எனவே, தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் மாதவிடாய் வராமல் இருப்பது, தீவிர வலி, அதிக ரத்தப்போக்கு, உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.