இன்று உலக கடல்சார் தினம்
சர்வதேச சரக்கு போக்குவரத்து வணிகத்தில் 80 சதவீதம் கடல் வழியாகவே நடக்கிறது.
உலக பொருளாதார வளர்ச்சியில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
கப்பல்கள், மாலுமிகள், அதன் பணியாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப்., நான்காவது வியாழன் (செப். 24ல்) உலக கடல்சார் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'கொள்கையிலிருந்து செயல்பாட்டிற்கு: கடல்சார் சிறப்பை ஊக்குவித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
ஆக்சிஜனில் பாதி கடல் தான் தருகிறது. கடல்சார் உணவுகள் கிடைக்கின்றன. எனவே வர்த்தகத்தை போல கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் அவசியம்.
கடல்சார் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினம், கப்பல் போக்குவரத்து, கடல் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற தொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மற்ற தொழில்களைப் போலவே, கடல்சார் தொழில்துறையும் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.
மேலும் சுமூகமான கடல் சேவைகளின் உதவியுடன், இன்று கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்புகளும் உலகில் எங்கு வேண்டுமானாலும் அனுப்பும் வசதி ஏற்பட்டுள்ளது.