தீவுகளை ரசிக்கணுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மொரீஷியஸ் தீவு, பரபரப்பான நகர்ப்பகுதியின் சலசலப்பில் இருந்து அமைதியை விரும்புபவர்களுக்கு சிறந்த இடமாகும்.

ஹவாய் (அமெரிக்கா)... அழகான கடற்கரைகள், கலாச்சார அனுபவங்கள் என குடும்பத்துடன் இங்கு செல்லலாம்.

பனிப்பாறைகள், எரிமலை நிலப்பரப்புகளை ஆராய்வது முதல் வெப்ப நீரூற்றுகளில் ஓய்வெடுப்பது வரை, தனித்துவமான, சிலிர்ப்பான அனுபவங்களை அளிக்கிறது ஐஸ்லாந்து.

ஃபூகெட், தாய்லாந்து... இரவு வாழ்க்கை, ரோட்டோர மார்க்கெட் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளுக்கு பிரபலமானது இது.

கலாபகோஸ் தீவுகள், ஈக்வடார் இயற்கை ஆர்வலர்களுக்கு பிடித்தமான இடமாகும். ராட்சத ஆமைகள் மற்றும் கடல் உடும்புகள் உள்ளிட்ட தனித்துவமான வனவிலங்குகளுக்கு இது பிரபலமானது.

பிரெஞ்சு பாலினேசியாவில் உள்ள போரா போரா ஆடம்பரத்தை விரும்புவோருக்கு ஏற்றது. பவளப்பாறைகளால் சூழப்பட்ட.. தண்ணீருக்கடியில் வில்லாக்களில் தங்கி கனவுலகை ரசிக்கலாம்.

கிரீஸில் உள்ள சாண்டோரினி, அதன் நீல குவிமாட கட்டடங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமனத்துக்கு பெயர் போனது. இது தம்பதிகளின் கனவு இடமாகவும் உள்ளது.