கூந்தல் வளர்ச்சியில் ட்ரிம்மிங் அவசியம்...

கூந்தலின் முனைகளில் ஏற்படும் வெடிப்புகளால், அதன் ஆரோக்கியம் பாழாகிறது. இதனால் கூந்தலின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது.

ஆரோக்கியமான கூந்தலை அழகாக காட்ட விரும்பினால் அடிக்கடி ட்ரிம் செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

வழக்கமாக ட்ரிம் செய்வது தலைமுடியை வளர செய்யும் என கூற முடியாது. ஆனால் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

ஆகவே மாதம் ஒருமுறை முடியை லேசாக ட்ரிம் செய்ய வேண்டும். இதனால் முடியின் வலிமை அதிகரிக்கும். குறிப்பாக நுணியில் காணப்படும் இறந்த முடிகள் அனைத்தும் வெட்டப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 முதல் 1. 5 செ.மீ வரை முடி வளரும். அதனால் 1 செ.மீ அளவு வெட்டுவது பற்றி கவலைப்பட வேண்டாம்.

ட்ரிம் செய்வது போல் மறக்காமல் கூந்தலுக்கு வாரம் ஒரு முறை மசாஜ் செய்யுங்கள். மசாஜின் போது வேருக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

கூந்தலை வலுவாக்க புரதம், ஒமேகா 3 துத்தநாகம் உள்ளடக்கிய சீரான உணவை எடுத்துக் கொள்வதும் அவசியம்.