கொளுத்தும் வெயிலில் சருமத்தை பொலிவாக வைக்க... இதோ டிப்ஸ் !
கொளுத்தும் வெயிலில் சில நிமிடங்கள் வெளியே சென்று வந்தாலே போதும்; முகத்தின் பொலிவு மாறி விடுகிறது. அந்தளவுக்கு வெயில் கொளுத்தி எடுக்கிறது.
வெயிலை சமாளித்து சருமத்தை பராமரிக்க இயற்கையான சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்; சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கலாம். எனவே, சில எளிய பாரம்பரிய வழிமுறைகள்...
சருமத்திலுள்ள எண்ணெய், அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்க பப்பாளி உதவுகிறது. நன்கு பழுத்த பப்பாளியுடன், தேன் கலந்து முகத்தில் பூசி கழுவி வர முகச்சுருக்கம் மாறி, பொலிவு உண்டாகும்.
குளிர்ச்சியான, அழற்சி எதிர்ப்புத்திறன் கொண்ட கற்றாழை கோடை காலத்தில் சருமத்துக்கு சிறந்தது. இதன் ஜெல்லுடன் சிறிது எலுமிச்சை சாறை கலந்து முகம், கழுத்தில் தடவி வர கருமை நீங்கி சருமம் பளபளப்பாகும்.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ள மஞ்சள் சருமத்துக்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது. கடலை மாவு, தயிர் ஆகியவற்றுடன் மஞ்சளை கலந்து பேஸ் பேக் ஆக பயன்படுத்தலாம்.
இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு முகவரான சந்தனம், சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்கிறது. குறிப்பாக, முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, மிருதுவாகவும், இயற்கையாகவே ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தேன் உதவுகிறது. தேனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து வாரம் 2 முறை பேஸ் பேக் முயற்சிக்கலாம்.