ரத்த அழுத்தம், இதய நோய்களிலிருந்து பாதுகாக்க இதோ டிப்ஸ்...!
உலகெங்கிலும் மன அழுத்தம், தவறான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால் ரத்த அழுத்தத்தினால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் 2020ல் தந்த புள்ளி விவரப்படி இந்தியாவில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களில் மூவரில் ஒருவருக்கு ரத்த அழுத்தம் உள்ளது.
ரத்த அழுத்த பாதிப்பின் அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. சற்று கவனம் செலுத்தினால் ரத்த அழுத்தம், இதய நோய்கள், அதன் பாதிப்புகளை வெகுவாக தவிர்க்கலாம்.
உடல் எடையை (பி.எம்.ஐ.,) சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 45 நிமிடங்கள் சீரான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும்.
உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் உப்பு அதிகமாக உள்ளது என்பதை நினைவு கொள்ளவும்.
இனிப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பூட்டப்பட்ட குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் அதிக அளவில் பழங்கள், காய்கறிகளை பச்சையாகவோ, மிதமாக வேக வைத்தோ சாப்பிட வேண்டும்.
புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த வேண்டும். அது ரத்தக் குழாய்களின் அடைப்புக்கும், பல வகையான நோய்களுக்கும் வழி வகுக்கும். மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
அதிகமாக டீ, காபி குடிப்பது, வெகு நேரம் டி.வி., பார்ப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.