புளிப்பு ஆப்பிள் சட்னி ரெசிபி இதோ
தேவையானப் பொருட்கள்: ஆப்பிள் - 2 அல்லது 3, வெல்லம் - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு, சோம்பு, கருஞ்சீரகம் - தலா அரை டீஸ்பூன்.
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், மிளகாய் துாள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன், புளி, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
ஆப்பிள்களின் மேற்புற மேற்புற தோல் மற்றும் கொட்டைகளை நீக்கி, சதைப்பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். சட்னி மிருதுவாக வர துருவிக்கொள்ளலாம்.
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானவுடன், சோம்பு, நறுக்கிய கொத்துமல்லி, புளிச்சாறை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையில் நறுமணம் வர துவங்கியதும், பொடியாக நறுக்கிய இஞ்சியை போட்டு, சில நிமிடங்கள் கிளறவும். பின், ஆப்பிளை சேர்த்து, மிதமான தணலில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
ஆப்பிள் மிருதுவான பின், வெல்லம் அல்லது சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். வெல்லம் பயன்படுத்துவதால், சட்னி மாறுபட்ட நிறம், சுவையுடன் இருக்கும்.
தொடர்ந்து, மிளகாய் பொடி, சீரக பொடி, உப்பு சேர்த்து கிளறி, மிதமான தணலில் வைக்கவும். கெட்டியானவுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால், சுவையான ஆப்பிள் சட்னி ரெடி.
ஆறியதும் இதனை கண்ணாடி பாட்டிலில் நிரப்பி, பிரிட்ஜ்ஜில் வைத்தால், சில வாரங்கள் வரை பயன்படுத்தலாம். சப்பாத்தி, தோசை, பரோட்டா, பூரிக்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடலாம்.