குழந்தைகளை அதீதமாகக் கண்டிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் !
குழந்தைகளை நெறிப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் பலரும் அவர்களிடம் கடுமையாக நடப்பர். சில நேரங்களில் கடும் சொற்களை பயன்படுத்தி அவர்களை காயப்படுத்துவர்.
சில நேரங்களில் சிறு தவறைக் கூட அவர்களை உணரச் செய்வதாக நினைத்து, அடிப்பது, காயப்படுத்துவது, மூர்க்கமாகத் தாக்குவது எனச் செய்வர்.
ஆனால், இது சரிவர புரிபடாமல் குழந்தைகளின் மனதில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.
மேலும், அவர்கள் தங்களது இளம் பருவத்தை அடையும் தருணத்தில் மனரீதியான பல இன்னல்களை சந்திப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சிறு வயதில் அவர்களது அறியாப் பருவத்தில் குழந்தைகளை துன்புறுத்துவது அவர்களது ஆழ் மனதில் எதிர்மறையான நிகழ்வாக பதியக்கூடும்.
இதுபோன்ற சம்பவம் பின்னாளில் அவர்களது வாழ்வில் பலவிதத்தில் எதிரொளிக்கும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாகும்.
சிறு வயதில் மனதில் எதிர்மறையாக பதியும் சம்பவங்கள், எதிர்காலத்தில் அவர்களின் வாழ்வில் பிரதிபலிப்பதால், மனதளவில் மட்டுமின்றி உடலளவிலும் குழந்தைகள் பாதிக்கப்படுவர்.
இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பல வகைகள் உள்ளது.
அறிவாற்றல் நடத்தை உத்திகள், கற்பித்தலில் வெவ்வேறான உத்திகள், பொறுப்பு அல்லது குற்றம் பற்றிய தெளிவு போன்ற பல பயிற்சிகளின் மூலம் குழந்தைகளின் மனநிலையை சரி செய்யலாம்.