வெயிலில் அதிக நேரம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பலரும் பதிவு செய்து காத்துள்ளனர்.
குறிப்பாக, 35 - 40 வயதினர் கூட தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், வலி நிவாரணி மருந்துகளை அதிகமெடுத்தல், சிறுநீரக பாதையில் பாதிப்பு, உடல் பருமன் என்பது பொதுவான முக்கிய காரணங்கள்.
தற்போது இதற்கு இணையாக, அதீத வெப்பத்துக்கு உள்ளாகுதல், காற்று மாசு, ரசாயனங்கள் சேர்க்கை ஆகிய மூன்றும் முக்கிய காரணங்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.
கட்டுமானம், விவசாய தொழிலாளர்கள், துறை சாரா பிரிவுகளில் மணிக்கணக்கில் தொடர்ந்து வெயிலில் பணிபுரிபவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுவதாக உறுதியாகியுள்ளது.
சாலை அமைக்கும் பணியாக இருந்தாலும் சரி, வயல், கட்டுமானம், செங்கல்சூளை, உப்பளம் என எங்கு பணி செய்தாலும் விழிப்புணர்வு நடவடிக்கை தேவை.
குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அருந்தவும், நிழலில் அமரவும் வேண்டும். தவிர, பணி செய்யுமிடங்களில் பாதுகாப்பான தண்ணீர் வசதி வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தவிர, வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், பருவநிலை பாதுகாப்பு செயல்பாடுகளுக்கும் ஒவ்வொருவரும் பங்களிப்பு அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.