சின்ன குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் வராமல் தவிர்ப்பது எப்படி?
பொதுவாகவே சின்ன குழந்தைகளுக்கு சராசரியாக ஆண்டிற்கு 6 முதல் 8 முறை மூக்கடைப்பு, ஜலதோஷம், தொண்டை எரிச்சல், இருமல், சளி என எதாவது ஒரு பிரச்னை ஏற்படக்கூடும்.
நோய் எதிர்ப்புத் தன்மை முழுமையாக இல்லாததால் குளிர்காலங்களிலும், பருவ மாற்றங்களிலும் இந்த பிரச்னைகள் தீவிரமாகும்.
முதலில் குழந்தைகளுக்கு கைகளை சுத்தமாக கழுவ கற்றுக் கொடுக்க வேண்டும்.
முகக்கவசம் பயன்படுத்த கற்றுக் கொடுக்கலாம். அசுத்தமான இடங்களில் குழந்தைகளை அதிக நேரம் விளையாட விட வேண்டாம்.
உடல் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பச்சை காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட பழக்க வேண்டும்.
வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தையின் விளையாட்டு பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை சரிபார்த்து இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை டாக்டர் பரிந்துரைப்படி கொடுக்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் காய்ச்சல் அல்லது இருமல், மூச்சு கோளாறு இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.