பல நோய்களுக்கு மன அழுத்தமே காரணம்
மன அழுத்தம் இன்சுலின் உற்பத்தியை குறைத்து, அது வேலை செய்வதை தடுப்பதால், நீரிழிவு பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
மன அழுத்தம் நேரடியாக நீரிழிவை உருவாக்காது. ஆனால், இயல்பு வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்து, முடிவில் நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதய நோய்களுக்கு வழிவகுக்கும்.
எனவே, மன அழுத்தம் வருகிறது என்பதை கவனித்து அதனை சரி செய்வது அவசியமானது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நோய்களுக்கு மன அழுத்தம் ஒரு மறைமுகமான காரணியாக உள்ளது.
தொடர் மன அழுத்தத்தை, தொடர் பரபரப்பான வழ்க்கை முறையை குறைத்துக்கொள்ள வேண்டும்.
மன அழுத்தத்தை நிர்வகிக்க, நீரிழிவால் பாதிக்கப்பட்டர்கள் 20 நிமிட நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் நீந்துதல் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும்.
தியானம் மற்றும் நினைவாற்றல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.