பளீர் வெயில்... வடாம் செய்ய டிப்ஸ்!
வடாம் மாவுடன் ஒரு கைப்பிடி உளுந்தை சேர்த்து அரைத்தால், வடாம் அதிக மொறுமொறுப்பாக இருக்கும்
மிளகாய்க்கு பதில், மிளகைப் பொடித்து சேர்த்து வடாம் பிழிந்தால், மாறுதலான சுவையோடு வடாம் மணக்கும்
வடாம் மாவில் ஓமத்தை பொடி செய்து சேர்த்து, இயற்கையான 'புட் கலர்' ஏதாவது சேர்த்து, ஓமப்பொடி அச்சில் பிழிய வேண்டும். இதை மாலை நேர ஸ்நாக்ஸாக பொரித்து சாப்பிடலாம்
வடாம் மாவை முதல் நாள் இரவே கிளறி வைத்துக் கொண்டால், காலையில் உப்பு, காரம் சேர்த்துக் கிளறி, வெயிலுக்கு முன் வடாம் போட்டு முடித்து விடலாம்
இளம் நாரத்தை இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி வடாம் மாவில் சேர்த்துப் பிழிந்தால் மணமும், சுவையும் கூடும்.
மாவில் சீரகம், பெருங்காயம், ஓமம், மற்றும் சிறிது எலுமிச்சை சாறு அல்லது மோர் சேர்த்தால் சுவை கூடும்.
காற்றோட்டமில்லாத டப்பாவில் போட்டு வைத்தால், ஒரு வருடத்திற்கு மேல் கூட கெடாமல் இருக்கும்.