டூர் செல்லும் முன் இதெல்லாம் மறக்காதீங்க...

வெளியூர் சுற்றுலா செல்வதற்கு முன் வீட்டில் செய்தித்தாள் போடுவதை நிறுத்தி விட வேண்டும். அல்லது அக்கம்பக்க வீட்டில் சொல்லி, எடுத்து வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

வீட்டின் கதவருகில் பல நாள் செய்தித்தாள்கள் எடுக்கப்படாமல் இருந்தால், வீட்டில் ஆள் இல்லை என்பதை தெரிந்து கொள்வர், திருடர்கள்.

வீட்டுச் சாவியை உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் கொடுத்து விட்டுச் செல்லவும்.

மின்சாரக் கோளாறு, கேஸ் சிலிண்டர் கசிவு, தண்ணீர் தொட்டியில் பிரச்னை என, ஏதாவது ஏற்பட்டாலும் அவர்கள் உடனே உங்கள் வீட்டை திறந்து சரி செய்ய முடியும்

வளர்ப்பு பிராணி வைத்திருப்பவர்கள் அவற்றை தனியே விட்டுப் போகாதீர்கள். அவை, சத்தம் போட்டு ஊரைக் கூட்டி விடும். தகுந்த நபர்களிடம் நீங்கள் வரும் வரை ஒப்படைத்து விட்டுச் செல்லுங்கள்

பஸ், ரயில், விமானம் இவற்றில் நீங்கள் பயணிப்பது எதில் என்பதை முடிவு செய்து கொண்டு, அதற்கு ஏற்றபடி, 'பேக்கிங்' செய்யவும்

ரயில் பயணத்தின் போது ஜன்னல் பக்கம் தலை வைத்துப் படுப்பதை பெண்கள் தவிர்க்கவும். நகைகள் திருடு போகும் அபாயம் உண்டு

பயணம் செல்லும் போது பழைய செய்தித்தாள்களை நிறைய எடுத்துச் செல்லுங்கள். தேவைப்படும் இடத்தில் கீழே போட்டு, அமர்ந்தால், உடைகள் பாழாகாது.

வீட்டிலிருந்து கிளம்பும்போது குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சிறிதளவு பணம் கொடுக்கவும்.

அனைவரது போன் எண்கள் எல்லாரிடமும் இருக்க வேண்டும். கூட்டத்தை விட்டு பிரிந்து நாம் எங்காவது சென்று விட்டால், நாம் இருக்கும் இடத்தை அவர்கள் போன் செய்து கண்டறிய முடியும்.