இன்று உலக திரையரங்கு தினம்

ஐ.நா., வின் யுனெஸ்கோ முயற்சியால் 1948ல் சர்வதேச திரையரங்க நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இதன் சார்பில் 1960 முதல் மார்ச் 27ல் உலக திரையரங்கு தினம் கொண்டாடப்படுகிறது.

உலகின் முதல் தியேட்டர் 1895ல் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் கட்டப்பட்டது. அதன் பெயர் நிகெலோடியான்.

இந்தியாவின் முதல் தியேட்டர் 1907ல் மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் கட்டப்பட்டது. அதன் பெயர் 'எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ்'.

1913ல், சென்னையில் கட்டப்பட்ட, 'எலக்டரிக் தியேட்டர்' தான், தமிழகத்தின் முதல் திரையரங்கு.

பின் 1914ல் கோவையில் கட்டப்பட்ட 'டிலைட் தியேட்டர்' மிகவும் பிரபலம்.

சினிமாவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தியேட்டர்கள் கட்டப்பட்டன. தற்போது பல கோடி நபர்களை அங்கமாக இணைக்கும் கனவு தொழிற்சாலையாக இருக்கிறது.