கோடையை சமாளிக்க எளிய டிப்ஸ் இதோ...
கோடையில், காலையில் எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். இதனால், உடல் உஷ்ணம் குறையும்.
உடனே, வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியேறும். உடம்பும் சூடு தணிந்து, குளிர்ச்சியாக துவங்கும்.
மற்ற பருவத்தில், நாள் ஒன்றுக்கு, எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால், கோடையில், 12 டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். உடல் ஈரப்பதம் குறைந்து, வறண்டு போகாமல் இருக்கும்.
இயல்பாகவே உடல் சூடு அதிகமுள்ளோர், மோரில் அரை தேக்கரண்டி வெந்தயத்தை இரவே ஊற வைத்து, காலையில் பருகலாம்.
இந்த பருவத்தில் ஒருநாளைக்கு, இரண்டு முறை, 'ஷவர் பாத்' எடுக்கலாம். மொத்த உடம்பும் குளிர்ச்சி அடையும்.
வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன், 'ப்ரிஜ்'ஜில் வைத்த குடிநீரை தேடாதீர். அதற்கு பதிலாக, எலுமிச்சை சாறு குடித்தால், வியர்வையால் இழந்த தாது உப்புகளை மீண்டும் பெற்று விடலாம்.
கோடையில், மதிய உணவில், கட்டாயம் மோர் இருக்கட்டும். இது, வியர்வையால் இழந்த தாது உப்புகளை மீட்டு தரும்.
சூட்டினால் வயிற்று வலி வந்தால், சிறிதளவு புளியை கரைத்து, அதனுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து குடித்தால், சூட்டு வலி உடனே சரியாகும்.