குழந்தைகளுக்கு உண்டாகும் பல் சொத்தையும்.. தீர்வும்... !
குழந்தைகளுக்கு வாயிலுள்ள கிருமிகள், சர்க்கரை உணவுகளால், பற்களின் எனாமல் சிதைக்கப்படுவதால் பல் சொத்தை ஏற்படுகிறது.
ஆரோக்கியமான உணவு பழக்கம் மூலம் குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
பாட்டிலில் பால் கொடுப்பதால், அதிலுள்ள பைபர் பற்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது.
இனிப்பு நிறைந்த சாக்லேட், குளிர் பானங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் பாட்டிலில் பால் கொடுப்பதற்கு பதிலாக சத்து மாவு கரைத்து கொடுக்கலாம்.
பற்கள் முளைத்த பின் சுவைத்து உண்ணும் உணவுகளை கொடுக்க வேண்டும். அப்போது தான் உமிழ்நீர் சுரக்கும்.
கடின பிரஷ் கொண்டு பல் துலக்கும் போது அதிலுள்ள பிளாஷ்டிக் காரணமாக பற்கள் பாதிக்கப்படும்.
ஒவ்வொரு முறை உணவு உண்ட பின் நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.