பாரம்பரிய ஸ்பெஷல்... மாப்பிள்ளை சம்பா இட்லி !
தேவையானப் பொருட்கள்: மாப்பிள்ளை சம்பா அரிசி - 6 கப், பச்சரிசி - 2 கப், உளுந்து - 1 கப், வெந்தயம் - சிறிதளவு.
வழக்கமாக செய்யும் இட்லிக்கு, மாவு அரைப்பது போல, உளுந்து மற்றும் வெந்தயத்தை, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
மாப்பிள்ளை சம்பா அரிசி, பச்சரிசி இரண்டையும் 5 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
முதலில் ஊற வைத்த வெந்தயம் மற்றும் உளுந்தை நைசாக அரைக்கவும். பின், அரிசியை, கொர கொரப்பாக அரைக்க வேண்டும்.
அரிசியை 5 மணி நேரத்துக்கு மேலாக ஊற வைத்தாலும், அரைக்க நேரம் எடுக்கும். எனவே, கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி விட்டு அரைக்கலாம்.
அரிசி மற்றும் உளுந்து மாவு இரண்டையும் உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைக்கவும்.
மறுநாள் இட்லி பாத்திரத்தில் மாவை வார்த்து, ஆவியில் வேக வைத்தெடுத்தால், பாரம்பரிய சுவையில், சத்து நிறைந்த மாப்பிள்ளை சம்பா இட்லி ரெடி.