கருவிலுள்ள குழந்தைக்கும் புற்றுநோய் அபாயம்... பெற்றோர் நினைத்தால் தவிர்க்கலாம் !
நவீன மருத்துவத்தின் அபார வளர்ச்சியிலும், வயது வரம்பின்றி பலரையும் தாக்குகிறது புற்றுநோய்.
இது கர்ப்பத்திலிருக்கும் சிசுவை தாக்குவதும் குறிப்பிடத்தக்கது.
மரபணுவே பெரும்பாலும் புற்றுநோய்க்கு காரணம்.
தற்போதைய சூழலில், தாய் கருவுற்றிருக்கும் போதே அனைத்து வகையான சுற்றுச்சூழல் மாசுக்களையும் எதிர்கொள்வது, பிற்காலத்தில் குழந்தைக்கு பாதிப்பு வர காரணமாகும்.
குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில், டிபன் மற்றும் டாய் பயன்பாடு கூட பிற்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
எனவே, பிளாஸ்டிக் தவிர்த்து மரபொம்மை கொடுக்கலாம்.
பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவையோ நீரையோ வைக்கும்போது 'பைபினல்' என்னும் ரசாயனம் உருவாகும். இது புற்றுநோயை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகளின் சத்தான உணவு முறை, துாக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றில் ஆரம்பம் முதல் கவனம் செலுத்த வேண்டும்.
எண்ணெயில் பொறித்த, செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவு, கொழுப்பு நிறைந்த, இயற்கைக்கு மாறான உணவுப்பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.