பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் சில!
கேஸ் அடுப்பைப் பற்றவைக்கும் போது சில சமயம், 'டப்'பென்ற சத்தத்துடன் பர்னரின் அடிப் பகுதியில் எரியும்.
இதைத் தடுக்க, கேஸை, 'ஆன்' செய்ததும், இரண்டு விநாடிகள் காத்திருந்து, பிறகு பர்னரின் மேல் லைட்டரை இடிக்காமல் பற்றவைக்க, சத்தமில்லாமல் எரியும்.
சுவரில் மாட்டக்கூடிய, 'கிளாஸ் பெயின்டிங்' ஓவியங்கள், கைவேலை செய்து முடித்ததும், 'ப்ரேம்' போடுவதற்கு முன்பு, அதன் நான்கு பக்கங்களிலும் குந்தன் கற்கள் வைக்கலாம்.
மேலும் சமிக்கி, கண்ணாடி, 'ஒர்க்' செய்துவிட, கூடுதல் 'பளபள'ப்போடு அழகாகக் கண்ணைக் கவரும்.
'பிளாஸ்டிக்' டப்பாக்களினுள் சிறிதளவு எண்ணெய் பூசி, பிறகு பொருட்களை போட்டு வைத்தால் டப்பாக்கள் கறையாகாமல் இருக்கும்.
துருப்பிடித்த பூட்டுகளுக்கு எண்ணெய் தடவினால் அழுகு படிந்து மேலும் இறுகி விடும். எண்ணெய்க்கு பதிலாக பவுடரை தூவி பிறகு திறந்தால் ஈசியாக இருக்கும்.
வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.