நீரின் சுவை மாறுவது எப்படி? அறிவோமா?

பூமிக்கு கீழ்தான் என்றாலும் ஒவ்வொரு இடத்துக்கும் நிலத்தடி நீரின் தன்மை மாறுகிறது.

குறிப்பிட்ட இடத்தில் ஆழ் துளை போர்வெல், கிணறில் இருந்து நிலத்தடி நீரை எடுக்கும்போது, மண்ணுக்கு அடியில் இருக்கும் நீரையே எடுக்கிறோம்.

மண்ணில் எளிதில் கரையக் கூடிய பொருள்கள் எல்லாம் கரைந்து அந்தத் தண்ணீர் கலவையாகவே இருக்கும்.

அந்தத் தாதுப் பொருள்கள் தான் நீருக்குச் சுவையைத் தருகின்றன.

உலகில் அனைத்து இடங்களிலும் மண் அமைப்பு ஒரே விதமாக இல்லை.

எனவே ஒவ்வொரு இடங்களிலுள்ள தாதுப் பொருள்களுக்கு ஏற்ப இனிப்பு, உவர்ப்பு, உப்பு என அதன் சுவை மாறுபடுகிறது.