பொட்டல உணவு பொருட்களில் சைவ - அசைவ குறியீடு அவசியம்
பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில், சைவ - அசைவ குறியீட்டை குறிப்பிடுவது அவசியம் என, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் அதில் பதப்படுத்துதல் முதல் 12 வகையான தகவல்கள் இடம் பெற்றிருக்கும். பொதுமக்கள் அந்த தகவல்களை
தெரிந்து, பொருட்களை வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி
உள்ளது.
தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் மற்றும் பதிவு எண், உணவின் பெயர், உற்பத்தியாளர் பெயர், முழு முகவரி, தயாரித்த தேதி, நிகர எடை, காலாவதி தேதி ஆகியவை, இடம் பெற வேண்டும்.
அதேபோல், ஊட்டச்சத்து விபரம், உணவு சேர்க்கைகளின் அறிவிப்பு மற்றும் அளவு, எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது இருக்க வேண்டும்.
மேலும் உணவுப் பொருட்கள் கோடு மற்றும் 'பேட்ச்' எண், நுகர்வோர் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண், ஆகியவை இருக்க வேண்டும்.
அதேபோல், சைவ மற்றும் அசைவ குறியீடு, கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
சைவ உணவுப் பொருளாக இருந்தால், 'பச்சை' வண்ணத்தில் குறியீடு இருக்கும். அதேபோல், அசைவ உணவுப் பொருளாக இருந்தால், 'சிவப்பு' வண்ணத்தில் குறியீடு இடம்பெற்று இருக்கும்.
அதன்படி, பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில், இது போன்ற தகவல்களை பார்த்து தெரிந்து, வாங்கி சாப்பிட வேண்டும்.
சைவம் சாப்பிடுவோரும், இது போன்ற குறியீடு தெரியாமல், சில நேரங்களில், அசைவம் கலந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், இந்த குறியீடு அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினர்.