டிவி பார்ப்பதால் ரத்த சர்க்கரை உயரும்! ஆய்வில் தகவல்
நீண்ட நேரம் 'டிவி', மொபைல் பார்ப்பது, கம்ப்யூட்டரில் தொடர்ச்சியாக வேலை செய்வது, 'டைப் - 2' நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை பாதிக்கும் என ஆய்வில் தெரிவந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் நடந்த அந்த ஆய்வில், 'டைப் - 2' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட, 217 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களின் தினசரி 'டிவி' நேரம், துாக்க பழக்கம், மொபைல் பயன்பாடு, ரத்த சர்க்கரை அளவு, ஆகியவை குறித்து கேட்டபட்டது.
பின், இத்தனை நாட்களாக இருந்த 'டிவி' பார்க்கும் நேரம் மற்றும் மொபைல் பயன்பாட்டை எந்த அளவு முடியுமோ அவ்வளவு நேரம் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை தரப்பட்டது.
டாக்டர்கள் வழங்கிய ஆலோசனைகள்: காலை எழுந்ததும் முதல் ஒரு மணி நேரம், இரவில் துாங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக டிவி, கம்ப்யூட்டர், மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
கம்ப்யூட்டர் முன் இருக்கும் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 வினாடிகள், 20 அடி துாரத்தைப் பார்ப்பது, நேரத்தை கடிகாரத்தில் பார்ப்பது அவசியம்.
மேலும் மொபைல் ஸ்க்ரோலிங் செய்வதற்கு பதிலாக நடைபயிற்சி செய்வது, புத்தகங்கள் படிப்பது நல்லது.
இரவு உணவை டிவி பார்க்காமல் குடும்பத்தினருடன் சாப்பிடுவது, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
கண்களுக்கும், ரத்த சர்க்கரைக்கும் மன அழுத்தத்திலிருந்து மட்டுமல்ல, மொபைல், கம்ப்யூட்டர் திரையில் இருந்தும் ஓய்வு அவசியம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.