உடல் எடை குறைப்பில் செய்யப்படும் தவறுகள் என்னென்ன?

உடல் எடையை பலர் அழகு சார்ந்து பார்க்கும் சூழல் தொடர்கிறது.

இது ஆரோக்கியத்திற்கு ஒட்டுமொத்தமாக வேட்டு வைத்துவிடும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

உடல் எடையை சரியான உணவு பழக்கம், அடிப்படை உடற்பயிற்சி இருந்தாலே எளிதாக குறைத்து விடலாம்.

காலை உணவை தவிர்ப்பது, டயட் பற்றி புரிதல் இன்றி பட்டினி கிடப்பது, கல்யாணம், பிறந்தநாள் என டார்கெட் வைத்து ஓடுவது போன்றவை உதவாது.

காலை உணவை தவிர்த்தால், மதியம் அதிகம் சாப்பிடும் பழக்கம் உருவாகும். இவை வயிறு உப்புசத்தை உருவாக்கக்கூடும்.

மூன்று வேளையும் சத்தான சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது, தேவையற்றதை தவிர்ப்பது, உடற்பயிற்சி போதுமானது.

இரவு உணவு முடிந்தவரை, 7 மணிக்குள் முடிப்பது நல்ல பலனை தரும்.