மன பதற்றத்தை தவிர்க்க என்ன செய்யலாம்?

வேலைச்சுமை, மரபணு காரணங்கள், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், வாழ்வியல் சூழல் மாற்றங்களால் மன பதற்றம் ஏற்படுகிறது.

எனவே, முடிந்தளவு தவறான வாழ்க்கை முறையை கைவிட வேண்டும்.

துாக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், அச்சம், எதிர்மறை எண்ணங்கள், எதிர்காலம் பற்றிய அதிகப்படியான கவலையினாலும் பதற்றம் ஏற்படும்.

இவற்றை தடுக்க மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். இது நரம்புகளை அமைதிப்படுத்த உதவும்.

தினமும் உடற்பயிற்சி செய்தால் உடலின் மன அழுத்த ஹார்மோன் குறையும்.

தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த துாக்கம் அவசியம்.

துரித உணவுகளை குறைத்து, சத்தான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.