பித்த வெடிப்புகள் எதனால் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி?
உடலில் சூடு அதிகமாவதால் கால் பாதங்களில் பித்த வெடிப்புகள் ஏற்படுகிறது.
வெயில், பனி, காற்று அதிகமாகும் போது உடலில் தோல் வறட்சி அதிகமாகும்.
சிலருக்கு இயற்கையிலேயே உடல் சூடாக இருக்கும். இதனால் கால் பாதங்களில் பித்த வெடிப்புகள் தோன்றும். எனவே, தோல் வறட்சியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு வர வாய்ப்புள்ளதால், நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பால், மோர், நெய், ஜூஸ் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் சூடு குறையும். தோலில் வறட்சி மாறும்.
பாதம் மற்றும் வெடிப்புள்ள இடங்களில் அமிர்த வெண்ணை அல்லது சாதாரண வெண்ணை தடவலாம் இதனால் பாதிப்பு குறையும்.