பாத எரிச்சல், கால் விரல்களில் ஊசியால் குத்துவது போன்று இருக்க என்ன காரணம்?

அடிக்கடி பாத எரிச்சலால் அவதிப்படும் நிலையில், கால் விரல்களில் ஊசியால் குத்துவது போன்றும், மதமதப்பாகவும் ஒருசிலருக்கு இருக்கக்கூடும்.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவை 3 மாதத்திற்கு ஒரு முறை ரத்த பரிசோதனை செய்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வருடத்திற்கு ஒரு முறையாவது உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மது, சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு கால்களிலும், மூளையின் நரம்புகளிலும் கண்களுக்கு செல்லும் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

எனவே, கால்களில் மதமதப்பு, உணர்ச்சியற்ற நிலை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் சென்று முழு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.