நீரிழிவால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
நீரிழிவு பாதிப்பு இருந்தால் அடிக்கடி கண்ணில் வலி உண்டாகும், கண் பட்டையில் கட்டிகள் ஏற்படும். கண்புரை உருவாகும்.
கண்ணில் அழுத்தம் அதிகரிக்கும். நரம்புகளை பாதிக்கும். ரத்த நாளங்களை சேதப்படுத்தும். விழித்திரையில் வீக்கம் ஏற்படும்.
இவற்றை தடுக்க உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டாக்டரின் பரிந்துரையில்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.
பெர்ரி, ஆப்பிள், கொய்யா, பேரிக்காய் உள்ளிட்ட நார்ச்சத்துள்ள பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உலர்ந்த பழங்களான திராட்சை, பேரீச்சம்பழம், அதிக சர்க்கரை உள்ள பழங்களை தவிர்க்க வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த மாவுச்சத்து குறைவாகவுள்ள உணவு, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.