உண்ணிப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
உண்ணி கடித்தாலே உண்ணிக் காய்ச்சல் வந்து விடும் என்பதில்லை; இந்த உண்ணியி ல் பாக்டீரியா தொற்று பாதித்து அது நம்மை கடித்து, நம் உடலில் பாக்டீரியா புகுந்தால், தொற்று வரலாம்.
எஸ்கார் புண், தொடைகளுக்கு இடையில், அக்குள், மார்பு, வயிறு என்று வெளியில் தெரியாத இடங்களில் தான் வரும்.
இதனுடைய அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் அறிகுறியைப் போன்று, வெள்ளை அணுக்கள் குறைவது, தட்டணுக்கள் குறைவது, உள் உறுப்புகளில் ரத்தக் கசிவு என்று இருக்கும்.
இதை உறுதி செய்வது சிரமம்; சிகிச்சை மிகவும் எளிது. பூச்சி கடித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலோ, தோலில் அதற்கான அடையாளம் தெரிந்தாலோ மருத்துவரிடம் வர வேண்டும்.
ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சுலபமாக குணப்படுத்தலாம். தாமதித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
புல் தரையில் நேரடியாக அமரக்கூடாது. செல்லப் பிராணிகளின் உடலில் உண்ணிப் பூச்சி இருக்கும் என்பதால், அவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.