லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்தது தமிழக அரசு
அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்க, வாட்ஸ்அப் புகார் எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் தொடர்பாக புகார் அளிக்க எண் அறிவிப்பு '94981 80936 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தரலாம்.
dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.
044-22321090, 22321085, 22310989, 22342142 - எண்களிலும் புகார் தரலாம்.
புகார் போன் நம்பர் விவரம் அடங்கிய தகவல்களை, அனைத்து அரசு துறையினர் பொதுத்துறை நிறுவனங்கள், தங்களது இணையதளத்தில் கட்டாயம் இடம் பெறச் செய்ய வேண்டும்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும், லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும் இடங்கள், போன் நம்பர் பற்றிய விவரங்கள், பிரதான இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத்துறை போன் நம்பர், முகவரி ஆகியவை தமிழ், ஆங்கிலத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.
இதை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அரசு துறை செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் இன்ஸ்பெக்சன் செல் அதிகாரிகள், இதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.