இந்தியாவில் உள்ள பழமையான இந்து கோவில்கள் !
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்... தஞ்சை பெரிய கோவில் சோழர் காலத்தில் கட்டடக்கலை சிறப்பம்சமாக விளங்கியது. கோபுரத்தின் உச்சி நிழல் தரையில் விழாதவாறு எழுப்பப்பட்டுள்ளது.
துவாரகாவில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட துவாரகாதீஷ் கோவிலில் சாளுக்கிய கட்டடக்கலையை ரசிக்கலாம்.
தமிழகம், மகாபலிபுரத்தில், 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மவர்மனால் கலைநயத்துடன் எழுப்பப்பப்பட்ட கடற்கரைக் கோவில் சிவபெருமான், விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
ஹம்பி நினைவுச்சின்னங்களின் ஒரு பகுதியான கர்நாடகாவிலுள்ள விருபாக்ஷா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஏழாம் நூற்றாண்டில் இது எழுப்பப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 1623 - 1655ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. பார்வதி தேவி, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில், அழகிய கட்டடக்கலைக்கு பெயர் பெற்றது.
இந்தியாவின் மிகவும் சுவாரசியமான பழங்கால கோவில்களில் ஒன்று, மகாராஷ்டிராவின் எல்லோரா குகையில் உள்ள கைலாசா கோவில். இது 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
13ம் நூற்றாண்டில் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோனார்க் சூரியன் கோவில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும்; ஒடிசாவின் முக்கியமான பழங்கால அடையாளங்களில் ஒன்று.
கும்பகோணம், ஆதி கும்பேஸ்வரர் கோவில் கி.பி 7ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. சோழர் பாணி கட்டடக்கலை மற்றும் தனித்துவமான சிவலிங்கத்தை காணலாம்.