இன்று உலக தர நிர்ணய தினம்
அண்டுதோறும் அக். 14ல் சர்வதேச தர நிர்ணய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஓ.,) உலக தொலைத்தொடர்பு யூனியன் (ஐ.டி.யூ.,), உலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.இ.சி.,) ஆகியவற்றின் சார்பில் இத்தினம் உருவாக்கப்பட்டது.
உலகில் நுகர்வோர்களுக்கு தரமான பொருட்களையே தயாரித்து வழங்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிது
பொருட்களில் தரம் இருந்தால் தான் அவை சந்தையில் நிலைத்து நிற்கும்.
தர மேலாண்மை தரநிலைகள் மிகவும் திறமையாக வேலை செய்யவும், தயாரிப்பு தோல்விகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
சுற்றுச்சூழல் மேலாண்மை தரநிலைகள் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கவும், கழிவுகளைக் குறைக்கவும், மேலும் நீடித்ததாகவும் இருக்க உதவும்.
தரமான பொருட்களை உருவாக்க பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவைகளை பாராட்டும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.