பாலைவனம் நடுவே ஒங்கியிருக்கும் பிரமாண்டமான கை!

மனோ டெல் டெசியர்டோ என்பது ஒரு பெரிய அளவிலான கை சிற்பம். இது வடக்கு சிலியில் உள்ள அன்டோஃபாகஸ்டா நகரின் அடகாமா பாலைவனத்தில் அமைந்துள்ளது.

நான்கு நீட்டிய விரல்கள் மற்றும் ஒரு கட்டைவிரல் மணலில் இருந்து வெளியே தெரியும்படி சிற்பம் உள்ளது.

சிலி சிற்பியான மரியோ ராசபல் என்பவரால் இந்த சிற்பம் கட்டப்பட்டுள்ளது. இந்த மிகைப்படுத்தப்பட்ட கை அளவு சிலி மக்கள் அடைந்த பாதிப்பு மற்றும் உதவியற்ற தன்மையை பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைப்பாடுகள் இரும்பு மற்றும் கான்கிரீட்டின் உதவியால் செய்யப்பட்டுள்ளது. இந்த சிற்பம் 11 மீ., அதாவது 36 அடி உயரம் கொண்டது.

உள்ளூர் அமைப்பான கார்ப்பரேசியன் ப்ரோ அன்டோஃபாகஸ்டா சிற்பம் அமைக்க நிதியளித்தது. மனோ டெல் டெசியர்டோ கை சிற்பம் 28 மார்ச் 1992ல் திறக்கப்பட்டது.