உடல் உறுப்புகளை தானம் செய்வது எப்போது?

உடல் உறுப்பு தானம் என்பது சீறுநீரகம், கல்லீரல் ஒரு பகுதி, சில வகை திசுக்கள் உயிரோடு இருக்கும்போது செய்ய முடியும்.

கண், இதயம், நுரையீரல் போன்ற பிற உறுப்புகள் மூளைச்சாவு அடைந்த பின்னரும் தானம் செய்யலாம்.

மூளைச்சாவு என்பது மூளைத்தண்டு செயல்பட முடியாமல் போகும்போது, ஒரு நபரால் மூச்சு விட இயலாது.

செயற்கை சுவாசம் அளிப்பதன் வாயிலாக, பிற உறுப்புகள் உயிரோடு சில மணி நேரம் வாழும்.

இதுபோன்ற சூழலில், உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் தேவைப்படுவோரின் உடலில் பொருத்தப்படுகிறது. இதற்கு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

உடல் உறுப்பு தானம் குறித்து, தற்போது அதிக விழிப்புணர்வு இருந்தாலும், வரும் முன் காக்க வேண்டியது அவசியம்.

வாழ்வியல் மாற்றம், சரியான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி என ஆரோக்கியத்துக்கு பொதுமக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.